அரசு பேருந்து

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள்

English Version

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி வரையறுக்கப்பட்டது

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி 12.12.1973 அன்று கம்பெனி சட்டத்தின்படி பாண்டியன் ரோடுவேஸ் கார்ப்பரேஷனிலருந்து பிரிந்து நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகம் லிமிடெட் என்ற பெயரில் 01.01.1974 முதல் தொடங்கப்படட்து,

பின்னர் 01.04.1983 அன்று திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகமாக பிரிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட பொதுமக்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக நாகர்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு நேசமணி போக்குவரத்துக் கழகமாக பிரிக்கப்பட்டது..

01.07.1997 முதல் கட்டபொம்மன் போக்குவரத்துக் கழகத்தின் பெயர் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (MDU.Dvn-II) லிமிடெட், எனவும், மற்றும் நேசமணி போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (MDU.Dvn-III) லிமிடெட் எனவும் மாற்றப்பட்டது.

பின்னர் இந்த போக்குவரத்துக் கழகம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட்., மதுரையுடன், ஒருங்கிணைப்புக் கொள்கையின் கீழ், 12.02.2004 முதல் இணைகக்ப்பட்டு மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு, மதுரை நிர்வாக இயக்குநரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் மண்டலமாக மாற்றப்பட்டது.

மீண்டும், 01.11.2010 முதல் ஒருங்கிணைந்த அரசு போக்குவரத்துக் கழகம் (மதுரை) லிமிடெட், மதுரையிலருந்து பிரிந்து, திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களின் நலனுக்காக 26.06.2013 அன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலியில் "தூத்துக்குடி" என்ற புதிய மண்டலம், ஆறு கிளைகளுடன் பொது மேலாளரின் கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட்டது.

அரசு அறிவிப்பின்படி, திருநெல்வேலி மண்டலம் சேரன்மகாதேவியில் 18.06.2015 அன்று புதிய பணிமனையும், தூத்துக்குடி மண்டலம் சாத்தான்குளத்தில் 08.03.2017 அன்று புதிய பணிமனையும் திறக்கப்பட்டது.

இந்த கழகம் தற்போது "தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிமிடெட், திருநெல்வேலி" என்ற பெயரில் செயல்படுகிறது. இந்த போக்குவரத்துக கழகத்தின் கீழ், திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி ஆகிய மூன்று மண்டலங்கள் உள்ளன.

பேருந்து எண்ணிக்கை

சேவைகளின் வகை பேருந்துகளின் எண்ணிக்கை
நகரம் 816
புறநகரம் 845
உதிரி 112
மொத்தம் 1773

இயக்குநர்கள் குழு உறுப்பினர்கள்

திரு K பனீந்திர ரெட்டி இ.ஆ.ப அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், போக்குவரத்து துறை
போக்குவரத்து கழகங்களின் தலைவர்
திரு டி.என். வெங்கடேஷ். இ.ஆ.ப., அரசு சிறப்பு செயலாளர், போக்குவரத்து துறை
திரு சி.ஆர்.பாலாஜி, பி.எஸ்சி., எம்சிஏ, எம்பிஏ, ஏசிஎம்ஏ, ஏசிஎஸ், கூடுதல் இயக்குநர் & இ.ஓ. அரசு இணை செயலாளர், நிதி துறை
திரு.ஆறுமுகம், பி,இ, பிஜிடிபிஎ, டிசிபி&எ, எம்பிஎ(ஹானர்ஸ்), பி,எல்எடபுள்யூ மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (மதுரை)
திரு.திருவம்பலம் பிள்ளை, பி.இ., எம்.எஸ்.சி., டிபிஎம்., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (கோயம்புத்தூர்)
திரு எஸ்.ஜோசப் டயஸ், பி.இ., எம்.எஸ்சி., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (விழுப்புரம்)
திரு ஆர்.பொன்முடி, பி.இ., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (சேலம்)
திரு எஸ்.எஸ்.ராஜ்மோகன், பி.இ., எம்பிஏ., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (கும்பகோணம்)
திரு பிரேம்குமார் ராதாகிருஷ்ணன், பி.காம்., ஏசிஏ., சுயாதீன இயக்குனர்
திருமதி டி.சரஸ்வதி, பி.காம்., எஃப்.சி.எஸ்., பெண் இயக்குனர் மற்றும் சுயாதீன இயக்குனர்
திரு வி.வெங்கடராஜன், எம்.காம், எசிஎம்எ, பிஜிடிஎப்எம், இணை மேலாண் இயக்குநர் - த.போ.வ.நி.க
திரு ஆர்.மோகன், பி.இ., எம்பிஏ., மேலாண் இயக்குநர் - த.அ.போ.க. (திருநெல்வேலி)

தொடர்பு விபரங்கள்

மேலாண் இயக்குனர்
த.அ.போ.க (திலி) வ.து.,
23/2, தூத்துக்குடி மெயின் ரோடு,
கே.டி.சி நகர்,
திருநெல்வேலி.
627 011
Contact : 0462 - 2520982
Email : tnstctnv@gmail.com
மண்டல விவரங்கள்
மண்டலம் முகவரி தொடர்பு எண் மின்னஞ்சல்
திருநெல்வேலி மண்டல அலுவலகம் பொது மேலாளர்
த.அ.போ.க (திலி) வ.து.,
எண்:19, திருவனந்தபுரம் ரோடு,
திருநெல்வேலி.
627 001
9487599080 regtnstctnv@gmail.com
நாகர்கோவில் மண்டல அலுவலகம் பொது மேலாளர்
த.அ.போ.க (திலி) வ.து.,
நேசமணி நகர், இராணித்தோட்டம், நாகர்கோவில்,
கன்னியாகுமரி மாவட்டம்,
629 001
04652 - 233068 tnstcngl@gmail.com

பேருந்து இயக்க பகுதி